தலைப்புச் செய்தி

Sunday, December 4, 2011

சிரியாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை வழங்கிய ரஷ்யா

சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்(Bashar al-Assad) அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து போராடும் மக்களை இராணுவம் மூலம் கொன்று குவிக்கும் சிரியாவுக்கு பொருளாதார தடையும், தற்காலிக வணிகத் தடையும் ஐ.நா சபை விதித்துள்ளது.
இதை ஏற்று அமெரிக்கா உட்பட அரபு கூட்டமைப்பு நாடுகள் சிரியாவுக்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஆனால் ரஷ்யாவோ அதை சிறிதும் பொருட்படுத்தவில்லை.
மாறாக ஆயுத உதவி மற்றும் கப்பலை தாக்கி அழிக்கும் யாக்னாட் என்ற ஏவுகணைகளை வழங்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் கடந்த 2007ம் ஆண்டு கையெழுத்தானது. அதன்படி சிரியாவுக்கு 72 யாக்னாட் ஏவுகணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் 300 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று கப்பலை தாக்க கூடியது.
இதேபோன்று பிரமோஸ் என்ற ஏவுகணை இந்தியா - ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டது. ஆனால் அவற்றை இந்திய கணணி மற்றும் கப்பல் போக்குவரத்து இயந்திரங்கள் மூலமே இயக்க முடியும்.
ஆனால் சிரியாவுக்கு வழங்கப்பட்டுள்ள யாக்னாட் ஏவுகணைகள் சிரியா இராணுவத்துக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது என ரஷ்ய செனட்டரும், வடக்கு பகுதி முன்னாள் இராணுவ தலைவருமான போபோவ் தெரிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சிரியாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை வழங்கிய ரஷ்யா"

Post a Comment