| இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிற குளிர்காலக் கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். |
|
இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பும் முன் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நடந்து கொண்டிருக்கிற குளிர்காலக் கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக நாளை(18.12.2011) நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் லோக்பால் மசோதா குறித்து ஆலோசித்து விட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விடுவோம். நாங்கள் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்வதோடு எங்கள் வேலை முடிவடைந்து விடுவதாகவும், அதன் பின்னர் நாடாளுமன்றம் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் தெரிவித்துள்ளார். |





0 comments: on "லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும்: பிரதமர்"
Post a Comment