தலைப்புச் செய்தி

Sunday, November 27, 2011

சமூகநீதி மாநாட்டிற்கு உற்சாகமான துவக்கம்


புதுடெல்லி:வரலாற்றின் ராஜபாதையில் புதிய காலடித் தடங்களை பதித்துக்கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டு நாள் மாநாடு திரளான மக்கள் ஆதரவுடன் உற்சாகமாக துவங்கியது.
நேற்று காலை 9.30 மணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் நட்சத்திரம் பதித்த மூவர்ண கொடியை ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். தேசிய-மாநில தலைவர்களும், பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பிரதிநிதிகளும் தக்பீரையும், கோஷங்களையும் உரத்த குரலில் முழங்கிய பொழுது மாநாட்டு நகர்
மெய் சிலிர்த்தது.
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மவ்லானா உஸ்மான் பேக் பிரார்த்தனை புரிந்தார். டெல்லி 100-வது ஆண்டை கொண்டாடும் சரித்திர வேளையில் சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட மக்களை பலப்படுத்துவதற்கான புதிய காலடித்தடமாக பாப்புலர் ஃப்ரண்டின் மாநாடு துவங்கியது குறிப்பிடத்தக்கது.
பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப், துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா, பொருளாளர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப், தேசிய செயற்குழு உறுப்பினர்களான பேராசிரியர் கோயா, அனீஸ் அஹ்மத், முஹம்மது ஷஹாபுத்தீன்,
காலித் ரஷாதி, எ.எஸ்.இஸ்மாயீல், யாஸிர் ஹஸன், யா முஹ்யத்தீன், மெளலானா கலீமுல்லாஹ், எஸ்.அஷ்ரஃப் மெளலவி, இல்யாஸ் தும்பே, பி.என்.முஹம்மது
ரோஷன், ஹாமித் முஹம்மது ஆகியோர் மாநாட்டில் தங்கள் பங்களிப்பை செவ்வனே நிறைவேற்றிக்கொண்டிருந்தனர்.
‘சக்திப்படுத்துதலுக்காக ஒன்றிணைவோம்: எதிர்காலத்தைக் குறித்த
கலந்துரையாடல்’ என்ற தலைப்பில் நடந்த தேசிய மில்லி கன்வென்சனை ஃபதேஹ்பூர் மஸ்ஜித் ஷாஹி இமாம் டாக்டர்.முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத் துவக்கி வைத்தார். கெ.எம்.ஷெரீஃப் மாடரேட்டராக பொறுப்பு வகித்தார். பாப்புலர் ஃப்ரண்டின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் மெளலானா கலீமுல்லாஹ் சித்தீகி வரவேற்புரை ஆற்றினார். 10 தலைப்புகள் கன்வென்சனில் சமர்ப்பிக்கப்பட்டன.
மதியம் ‘நீதிக்கான மக்களின் உரிமை’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேராசிரியர் கோயா மாடரேட்டராக (மட்டுறுத்துனர்) பொறுப்பை வகித்தார். பல்வேறு மனித உரிமை, சமூக ஆர்வலர்கள் பல்வேறு தலைப்புகளில் கருத்துரை சமர்ப்பித்தனர். பின்னர் மாநில பிரதிநிதிகள் தயாரித்த பல்வேறு மொழிகளிலான கலை நிகழ்ச்சிகளும் நடந்தேறின.
இன்று மதியம் ஒரு மணிக்கு மாபெரும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சமூகநீதி மாநாட்டிற்கு உற்சாகமான துவக்கம்"

Post a Comment