தலைப்புச் செய்தி

Sunday, November 27, 2011

வன்முறையை தூண்டும் ஹஸாரே: திக்விஜய் சிங்


புதுடெல்லி:அன்னா ஹஸாரே வன்முறையை தூண்டுவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் சீக்கிய இளைஞர் ஒருவரால் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அன்னா ஹஸாரே,’அந்த இளைஞர், சரத்பவாரை ஒரு தடவைதான் அடித்தாரா?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி ட்விட்டர் சமூக இணையதளத்தில் திக்விஜய்சிங் கூறியிருப்பதாவது:அமைச்சர் ஒருவர் தாக்கப்பட்டார் என்ற தகவல் வரும்போது, அவரை ஓர் அடிதான் அடித்தார்களா என்று கேட்பதுதான் காந்தியவாதி நடந்துகொள்ளும் முறையா? அவரை மேலும் தாக்க வேண்டும் என்று தூண்டுவதுதானே இதன் உள்அர்த்தம்.
இதேபோல் ஹசாரேவின் குழுவில் உள்ள காவல்துறை முன்னாள் அதிகாரியான கிரண் பேடி, சட்டத்தை மீறி செயல்படுங்கள் என்று மக்களுக்கு அழைப்புவிடுகிறார்.
முன்னாள் சட்ட அமைச்சரான சாந்தி பூஷண், நீதிபதிகள் மூலம் சாதகமாக தீர்ப்பு வழங்க பேரம் பேசுகிறார்.
வருவாய் துறை உயரதிகாரியாக இருந்த கெஜ்ரிவால், எங்கிருந்து நன்கொடை பெறுகிறார் என்பதே தெரியவில்லை என்று திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "வன்முறையை தூண்டும் ஹஸாரே: திக்விஜய் சிங்"

Post a Comment