தலைப்புச் செய்தி

Sunday, November 20, 2011

ஸர்தார்புரா:கூட்டுப் படுகொலையை நிகழ்த்த தெருவிளக்கை நிறுவிய மின்சார வாரிய ஊழியர்கள்


அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரமான தாக்குதல் நடந்த ஸர்தார்புராவில் சங்க்பரிவார ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு முஸ்லிம் வீடுகளை அடையாளம் காண தெருவிளக்கு கம்பத்தில் ஹாலோஜன் விளக்கை மாட்டி உதவியவர்கள் குஜராத் மின்சாரவாரியத்தில் பணியாற்றும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் ஆவர்.
இவ்வழக்கு தொடர்பாக கடந்த மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 31 பேரில் மூன்றுபேர் மின்சார வாரிய ஊழியர்களாவர். மதுர் பட்டேல், ஜயந்த் பட்டேல், கணேஷ் பிரஜாபதி ஆகியோர் ஆவர்.
1500 பாத்திரங்களில் பெட்ரோலும், தீப்பந்தங்களுடன் வந்த 1000 க்கும் அதிகமான ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு பயந்து 17 பெண்களும், 11 குழந்தைகளும், ஐந்து ஆண்களும் மெஹ்ஸானாவில் ஒரு வீட்டில் ஒழிந்திருந்தனர். மின்சார கட்டணம் செலுத்தாததால் கிராமத்தின் தெரு விளக்குகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. ஆனால், மதுர் பட்டேல் என்ற மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றிய ஹிந்துத்துவா பயங்கரவாதி முஸ்லிம்கள் உயிருக்கு அஞ்சி மறைந்திருந்த வீட்டிற்கு அருகில் உள்ள தெருவிளக்கு கம்பத்தில் மின்சார தொடர்பை சரி செய்து விளக்கு மாட்டப்பட்டுள்ளது. இதற்கு காரணம் முஸ்லிம்கள் ஒழிந்திருந்த வீட்டை சரியாக அடையாளம் காண்பதற்காகும்.
வீட்டிற்கு வெளியே பூட்டிவிட்டு நடத்திய தீவைப்பில் 33 அப்பாவி முஸ்லிம்களும் உயிருடன் கொடூரமாக எரித்துக் கொலைச் செய்யப்பட்டனர். கிராமத்தில் மின்சார விநியோகத்திற்கான ஊழியராக பணியாற்றியவன் மதுர் பட்டேல். பிரஜாபதி அப்பகுதியில் மின்சார மீட்டர் ரீடராகவும், ஜயந்த் பட்டேல் மின்சார வாரியத்தில் கிளார்க்கும் ஆவர். வீட்டிற்கு தீ வைக்க வந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கூட்டத்தில் இம்மூன்றுபேரும் இருந்தனர் என சாட்சிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கூட்டுப் படுகொலையில் இவர்கள் குற்றவாளிகளாக இருந்த போதிலும் இம்மூன்று பேருக்கும் எதிராக மின்சார வாரியம் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தான் இல்லை எனவும், வழக்கு துவங்கி மூன்று மாதத்திற்கு பிறகே தனது பெயர் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்ததாகவும் மதுர் நீதிமன்றத்தில் கூறியபொழுது நீதிமன்றம் அதனை தள்ளுபடிச் செய்தது.


News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஸர்தார்புரா:கூட்டுப் படுகொலையை நிகழ்த்த தெருவிளக்கை நிறுவிய மின்சார வாரிய ஊழியர்கள்"

Post a Comment