நியூ டெல்லி: தன்னுடைய வசையை நீட்டிக் கொண்டு இருக்கும் காங்கிரஸின் பொது செயலாளர் திக் விஜய் சிங், சுவாமி ராம்தேவ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் ஆகியோர்கள் துறவி அல்ல, நல்ல விற்பனையாளர்கள் என்று கூறியுள்ளார்.
ஊடங்களுக்கு பேட்டி அளித்த சிங், காவி உடை அணிந்தவர்கள் எல்லாம் துறவி ஆக முடியாது, வெளியில் காவி உடை அணிந்து கொண்டு உண்மை வாழ்வில் நல்ல விற்பனையாளர்களாக இவர்கள் திகழ்கிறார்கள் என்றும், பாடஞ்சலி யோக் பல்கலைகழகம் மற்றும் திவ்ய யோக் பார்மசியை நடத்தி வரும் சுவாமி ராம்தேவ் மற்றும் ரவி சங்கர் நடத்தி வரும் ஆர்ட் ஆஃப் லிவிங் பௌண்டேசனையும் சுட்டி காட்டிய அவர், நாங்கள் சாது அகாட பரிஷாத் மற்றும் சங்கராச்யாரை பின்பற்றுகிறோம், முதலில் பாபா ராம் தேவ் எந்த சாதுவின் பரம்பரையை சார்ந்தவர் என்பதை தெரியபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடியில் சிக்கி கொண்டு இருக்கும் பாபா ராம்தேவ் இதற்க்கெல்லாம் முதலில் பதில் அளிக்கட்டும் என்றும், உத்திரகாண்டில் ஆசிரமத்தை நடத்தி வரும் பாபா ராம்தேவ் ஏன் அங்கு ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை என்றும், கர்நாடகாவில் ஆசிரமத்தை நடத்தி வரும் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் ஏன் அங்கு ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை என்றும் கேள்வி எழுப்பிய அவர், தொண்டு முதலில் தங்கள் சொந்த மாநிலத்தில் இருந்து தொடங்கட்டும் என்றும், சொந்த மாநிலத்தில் ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பட்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.
news@thoothu




0 comments: on "பாபா ராம்தேவ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் துறவி அல்ல, நல்ல விற்பனையாளர்கள்: திக் விஜய் சிங்"
Post a Comment