நெல்லை:இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இறையில்லம் பாப்ரி மஸ்ஜிதை மீட்க தமிழகத்தில் சமூக நல்லிணக்க ரதயாத்திரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதன் துவக்க நிகழ்ச்சி நெல்லை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் மேலைப்பாளைத்தில் நேற்று(19/11/2011)நடைபெற்றது. ஆனால் இந்த யாத்திரையை நடத்த போலீஸ் அனுமதி மறுத்தது. இதனைத் தொடர்ந்து தடையை மீறி ரதயாத்திரை நிகழ்ச்சியினை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் இக்பால் தடையை மீறி துவக்கி வைத்தார்.
மாநிலத் தலைவர் S.M.பாக்கர் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் சையது இக்பால், ரத யாத்திரைக்கு தடை விதித்தமைக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார். நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.மணி, மீனவகபடி மாறன், சீனிவாசன் ஆகியோர் தங்களது வாழ்த்துரைகளை வழங்கினர். பின்னர் போலீஸார் ரதயாத்திரையில் கலந்து கொண்டவர்களை கைதுச் செய்து மாலையில் விடுதலைச் செய்தனர்.
1990-ஆம்ஆண்டு ராம ரதயாத்திரை நடத்தி இந்தியா முழுவதும் வன்முறையை தூண்டி ரத்தக் களரியை ஏற்படுத்திய அத்வானியின் ஜனசேதனா ரதயாத்திரைக்கு தமிழகத்தில் தாராளமாக அனுமதி வழங்கப்படும் வேளையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூக நல்லிணக்க யாத்திரைக்கு தடை விதித்ததன் மூலம் தமிழக அரசின் எதேச்சதிகார முஸ்லிம் விரோத மனோநிலை மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகுப்பை கடந்த ஆகஸ்ட் -15 அன்று நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் நடத்த தமிழக அரசும், காவல்துறையும் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments: on "இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூக நல்லிணக்க ரதயாத்திரைக்கு போலீஸ் தடை – நூற்றுக்கணக்கானோர் கைது"
Post a Comment