காஷ்மீரைச் சேர்ந்த இம்ரான் அகமது பட் என்ற 18 வயது இளைஞனுக்கு வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடிய பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.
பிரசிலுக்கு சென்று அங்கே கால்பந்தாட்ட பயிற்சியாளர் ஆவதற்குரிய பயிற்சியைப் பெற அந்த இளைஞனுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
சென்ற வருடம் இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது இந்தியப் படையினர் மீது கல்லெறிந்தமைக்காக இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பிரசிலில் உள்ள கால்பந்தாட்ட பயிற்சியாளர்களுக்கான மிகப் பெரிய சங்கம் இது.சா போலோ நகரத்தில் உள்ள தொழில்முறை கால்பந்தாட்ட பயிற்சியாளர் சங்கத்தில் பயிற்சி பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காஷ்மீர இளைஞர்கள் ஐந்து பேரில் இந்த இம்ரான் தான் மிகவும் சின்னவர் ஆவார்.
உலக கால்பந்தாட்ட நிர்வாக அமைப்பான ஃபிபாவின் அங்கீகாரம் பெற ஒரு அமைப்பிது.
அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர் இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது இதுவே முதல் முறை.
இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற நிலைமைக்கு வருவதற்காக ஏழு ஆண்டுகாலம் தான் கடுமையாக உழைத்துள்ளதாக இம்ரான் கூறுகிறார்.
மிக ஏழ்மையான பின்னணியில் இருந்து தான் வருவதாகவும் பதினாறு வயது வரைதான் தன்னால் படிக்க முடிந்தது.
மிக ஏழ்மையான பின்னணியில் இருந்து தான் வருவதாகவும் பதினாறு வயது வரைதான் தன்னால் படிக்க முடிந்தது.
அதற்கு மேல் படிக்கச் செல்ல குடும்ப சூழ்நிலை அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இளம் வயதிலேயே குடும்ப வருமானத்துக்கு பங்களிக்கின்ற வேலையை இம்ரான் செய்கிறார்.
ஸ்ரீநகர் அருகில் உள்ள சர்வதேச விளையாட்டு பயிற்சி அறக்கட்டளையில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக இவர் வேலைபார்த்து வருகிறார்.





0 comments: on "கல்லெறிந்த காஷ்மீர் இளைஞனுக்கு ஒரு வாய்ப்பு"
Post a Comment