தலைப்புச் செய்தி

Thursday, November 3, 2011

வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா பின்னடைவு


ஐ.நா. மன்ற வளர்ச்சித் திட்ட அமைப்பு வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான மனித வளர்ச்சிக்கான குறியீட்டில் பட்டியலிடப்பட்ட 187 நாடுகளில், இந்தியா 134-வது இடத்தில் உள்ளது.
ஆண் – பெண் சமத்துவமற்ற நிலையில், இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.
பொருளாதார மேம்பாட்டிலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பல பிரிவுகளில் மோசமாக உள்ளதாக ஐ.நா. ஆய்வு கூறுகிறது.
வருமானம், ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம், கல்வி மற்றும் சுகாதார வாய்ப்புக்களைப் பெறுதல் உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மனித வளர்ச்சிக்கான குறியீட்டை ஐ.நா. அமைப்பு முடிவு செய்துள்ளது.
பொருளாதார மேம்பாட்டில் நடுத்தரமான நிலையில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா அதைவிட மோசமான நிலையிலேயே உள்ளது.
இந்தியர்கள் சராசரியாக வாழும் காலம், தெற்காசிய நாடுகளிலேயே மிக மோசமாக உள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண் – பெண் சமத்துவம் என்ற விஷயத்தில் பட்டியலிடப்பட்ட 146 நாடுகளில், இந்தியா 129-வது இடத்தில் உள்ளது.
இவ்விஷயத்தில் வங்கதேசம் 112-வது இடத்திலும், பாகிஸ்தான் 115-வது இடத்திலும் உள்ளன.
இந்திய நாடாளுமன்றத்தில் 10 சத இடம்தான் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த எண்ணிக்கை வங்கதேசத்தில் 18 சதமாகவும், பாகி்ஸ்தானில் 21 சதமாகவும் உள்ளன.
சுமார் 50 சதம் இந்திய ஆண்கள் உயர்கல்வி கற்றுள்ள நிலையில், 25 சதம் பெண்கள்தான் அந்த வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இந்தியா, வேகமான பொருளாதார வளர்ச்சியில் வேகம் பெற்றிருந்தாலும், வசதி படைத்தவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையில், வளங்களை சமமாகப் பகிர்ந்தளிக்காத காரணத்தால், இந்தியா இத்தகைய நிலையை சந்தித்திருப்பதாக அறிக்கை கூறுகிறது.
ஐ.நா. ஆய்வின்படி, உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில்தான் அதிகபட்சமாக 612 மில்லியன் பேர், அதாவது நாட்டு மக்கள் தொகையில் பாதிக்கு மேல் ஏழைகளாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா பின்னடைவு"

Post a Comment