தலைப்புச் செய்தி

Wednesday, November 30, 2011

விலகி வந்தால் பணம் தருவோம் - தலிபான்களுக்கு நேட்டோ அழைப்பு


ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளை எதிர்த்து தலிபான் போராளிகள் போராடி வருகின்றனர். இவர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்கா,இங்கிலாந்து,பிரான்ஸ் உள்ளிட்ட படைகளைக் கொண்டுள்ள நேட்டோ ராணுவம் திணறி வருகிறது.
தற்போது இவர்களைச் சமாளிக்க பண ஆயுதத்தை நேட்டோ தேர்ந்தெடுத்துள்ளது. தலிபான் போராளிகள் தலிபான் படையிலிருந்து விலகி வந்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதோடு மட்டுமல்லாமல் மாதந்தோறும் ரூ 24,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதான கொலை வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். அவர்களிடம் எந்த விசாரணையும் இருக்காது என்றபோதிலும் அவர்கள் தீவிரவாதத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.

இந்தத் தகவலை மேஜர் ஜெனரல் டேவிட் ஹூக் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்தத் திட்டத்திற்கு கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் அமைதி ஏற்பட இதைத்தவிர வேறு வழியில்லை என்றார். ஆனால் இந்தத் திட்டத்திற்கு நேட்டோ படையினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 



Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "விலகி வந்தால் பணம் தருவோம் - தலிபான்களுக்கு நேட்டோ அழைப்பு"

Post a Comment