தலைப்புச் செய்தி

Wednesday, November 9, 2011

குஜராத் முன்னாள் அமைச்சரிடம் நானாவதி கமிஷன் விசாரணை


குஜராத் மதக் கலவரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஐ.கே. ஜடேஜாவிடம் நானாவதி கமிஷன் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியது.
2002-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து குஜராத்தின் பல பகுதிகளில் வன்முறை பரவியது. அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடி, கலவரத்தைத் தடுக்கத் தவறியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக நீதிபதிகள் ஜி.டி. நானாவதி, அக்ஷய் மேத்தா ஆகியோர் அடங்கிய நானாவதி கமிஷன் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
2002-ல் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக இருந்த ஐ.கே. ஜடேஜாவிடம் செவ்வாய்க்கிழமை நானாவதி கமிஷன் விசாரணை நடத்தியது.
விசாரணைக்குப் பின், செய்தியாளர்களிடம் ஐ.கே. ஜடேஜா கூறியது: கோத்ரா ரயில் எரிப்பு சம்பம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக என்னிடம் நீதிபதிகள் கேள்விகள் கேட்டனர். அப்போது நான் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தேன் என்றார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரியான சஞ்சய் பட்டின் குற்றச்சாட்டான, கலவரத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தூண்டிவிட்டார் என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டதா என்று கேட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். 

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "குஜராத் முன்னாள் அமைச்சரிடம் நானாவதி கமிஷன் விசாரணை"

Post a Comment