தலைப்புச் செய்தி

Monday, November 14, 2011

அமெரிக்காவில் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டார் அப்துல்கலாம்


இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அமெரிக்காவில் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

2009 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், அங்கிருந்த விமான நிலைய ஊழியர்களால் பாதுகாப்பு என்ற பெயரில் காலணிகளைக் கழற்றும்படி கூறி அவமானப்படுத்தப்பட்டார். அவர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி என்றிருந்த போதிலும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வித கண்ணியமும் அளிக்கவில்லை. அதேபோன்று, மீண்டும் ஒருமுறை அப்துல்கலாம் அமெரிக்காவில் அவமானப்படுத்தப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

இவ்வாண்டு கடந்த செப்டம்பர் மாதம் 29 ம் தேதி அமெரிக்கா சென்றிருந்த அப்துல்கலாமின் மேலங்கி, காலணி ஆகியவற்றைப் பறித்துச் சென்ற அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை 'வெடிபொருட்கள் சோதனை'க்கு உட்படுத்திய பின்னரே திரும்ப அளித்துள்ளனர். அவருடன் இருந்த இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் அப்துல்கலாம் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் என்று தெரிவித்தும் அமெரிக்க அதிகாரிகள் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

இச்செய்தி தெரியவந்துள்ள இந்திய அரசு தனது கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் அமெரிக்காவுக்குத் தெரிவித்துள்ளது.

எனினும் அப்துல்கலாம் இது குறித்து எதுவும் கூறவில்லை.அதேசமயம், ஜார்ஜ் புஷ் போன்ற முன்னாள் அமெரிக்க அதிபர்களின் அரசுசாராத சொந்தப் பயணத்தின் போதும் இந்திய அரசு அவர்களுக்கான பாதுகாப்புச் சோதனைகளை மிகவும் தளர்த்தி ராஜ மரியாதை செய்கிறது என்பது குறிக்கத்தக்கது

இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமைச் சோதனையிட்டது போன்ற சம்பவங்கள் நிறுத்தப்படாவிட்டால், இந்தியா வரும் அமெரிக்க உயர் அதிகாரிகளை நாங்களும் சோதனைக்கு உட்படுத்துவோம்" என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அமெரிக்க பாதுகாப்பு படையினரால் சோதனை செய்யப்பட்டு மீண்டும் அவமரியாதை செய்யப்பட்டார். நியூயார்க் விமான நிலையத்தில் அவரது கோட், ஷூ ஆகியவற்றைக் கழற்றி வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டது.  இந்தச் சம்பவத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து இருந்தது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர்,

"அப்துல்கலாமிடம் சோதனை செய்யப்பட்டதை ஏற்றுக் கொள்ள இயலாது. இந்தச் சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் நிறுத்தப்படா விட்டால் அமெரிக்க உயர் அதிகாரிகளையும் நாங்கள் சோதனைக்கு உட்படுத்துவோம்."என்று கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அமெரிக்காவில் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டார் அப்துல்கலாம்"

Post a Comment