நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 6-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் முடங்கியது.
எதிர்க்கட்சிகளுடனான பிரச்னையைத் தீர்க்க நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தால் பயன் ஏதும் ஏற்படவில்லை.
சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்னையாக வெடித்தது. இது தவிர தெலங்கானா விவகாரம், முல்லைப் பெரியாறு அணை பிரச்னை ஆகியவற்றை மையமாக வைத்தும் மக்களவை, மாநிலங்களவையில் எம்.பி.க்கள் பிரச்னை
எழுப்பினர்.
நேரடி அன்னிய முதலீடு விவகாரத்தில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ், தி.மு.க.வும் அரசுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து, எதிர்க்கட்சிகளுடன் இணைந்துள்ளன.
முன்னதாக நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். ஆனால் அதில் சுமுக முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோருகின்றனர். ஆனால் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களை ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
இரு அவைகளும் கூடிய உடனேயே அன்னிய முதலீடு எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன், பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டவாறு அவைக்கு வந்தனர். இது தவிர தெலங்கானா தனி மாநிலம் கோரி தெலங்கானா பகுதி எம்.பி.க்களும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை; கேரள மக்களைக் காக்க வேண்டும் என்று கூறி கேரள எம்.பி.க்களும் வாசக அட்டைகளை எடுத்து வந்தனர்.
அûவையின் மையப் பகுதிக்கு வந்து எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பியதால் அவையில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் இரு அவைகளும் முதலில் 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோதும் அமைதி ஏற்படவில்லை. இதனால் இரு அவைகளும் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 22-ம் தேதி தொடங்கியது. கறுப்புப் பணம், 2ஜி வழக்கில் ப.சிதம்பரத்தின் தொடர்பு, விலைவாசி உயர்வு, இப்போது அன்னிய நேரடி முதலீடு என பல்வேறு பிரச்னைகளால் தொடர்ந்து அமளி ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 21-ம் தேதி வரை குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதால் கோடிக்கணக்கான பணம் வீணாகிறது. இப்பணத்தை அவையை நடத்த விடாமல் தடுக்கும் உறுப்பினர்களிடமிருந்து வாங்க வேண்டும். வேலைக்கு வராத அல்லது ஒழுங்காக வேலை செய்யாத பணியாளருக்கு சம்பளம் தருவதையோ வேலையில் தொடர்ந்து வைத்திருப்பதையோ எவரும் விரும்புவதில்லை. சாதாரண ஒரு நிறுவனத்திற்கே இந்நிலை என்றால் உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தில் நிலை என்ன

0 comments: on "வீணாகும் மக்கள் பணம்-6-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்"
Post a Comment