இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுதொடர்பான குற்றச்சாட்டுகளில் கைதுசெய்யப்பட்டிருப்பவர்களில் ஐந்துபேருக்கு உச்சநீதிமன்றம் பிணைவழங்கியுள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுடெல்லி திகார் சிறைச்சாலையில்இருக்கும் பலரில, ஐந்து தனியார்துறைஉயரதிகாரிகளுக்கு பிணை வழங்கிஉச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி. எஸ. சிங்விமற்றும் எச் . எல் . தத்து கொண்ட பெஞ்ச் உத்தரவிட் டுள்ளது.
யுனிடெக் நிறுவனத்தின் மேலா ண் இயக்குநர் சஞ்சய் சந்திரா, சுவான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோய ங்கா, ரி லை யன்ஸ் அம்பானி குழுமத்தின் அதிகாரிகளான ஹரி நாயர், கவுதம் கோஷ் மற்றும் சுரேந்திர பிபா ரா ஆகியோருக்கே உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இவர்களை விடுவிக்க காப்புத் தொகையாக தலா பத்து லட்சம் ரூபாய்களை, இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதிக்கு திருப்தியளிக்கும் வகையில் அந்த ஐந்து பேரும் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியுள்ளனர்.
தங்களுக்கு பிணை வழங்க சிறப்பு நீதிமன்றமும், டெ ல்லி உயர்நீதிமன்றமும் மறுத்த நிலையில், இந்த ஐவரும் உச்சநீதிமன்றத் தை அணுகி னார்கள். அவர்களுக்கு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு த் தெரிவித்த மத்திய புலனாய்வுத்துறை, அந்த ஐந்து பேரும் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தை அணுகலாம் என வாதிட்டது. எனினும ் அதை நிராகரித்த உச்சநீதிமன்றம் அவர்களுக்கு பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை 14 பேர் மீது சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வழக்கு விசாரணையும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தனக்கு இந்த வழக்கு தொடர்பில் பிணை வழங்க வேண்டும் என்று கோரிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் மனு சிறப்பு நீதிமன்றதால் நிராகரிக்கப்பட்ட நிலையில் , அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அந்த வழக்கின் விசாரணை டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது.
இதனிடை யே இந்த வழக்கின் விசாரணையை, திகார் சிறைச்சாலையில் நடத்துமாறு நேற்று பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற நிர்வாக உத்தரவை நிறுத்தி வைக்க டெ ல்லி உயர்நீதிமன்ற ம் உத்தரவிட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற த்தில் கோரிக்கை விடுத்ததை அடுத்து நீதிமன்றம் தனது உத்தரவை மாற்றியமைத்ததுடன், மாற்று இடத்தைத் தேர்வு செய்யுமாறு நீதிமன்ற பதிவா ளருக்கும் அறிவுறுத்தியுள்ளது.
0 comments: on "2 ஜி வழக்கில் ஐந்து பேருக்கு பிணை"
Post a Comment