தலைப்புச் செய்தி

Monday, September 5, 2011

கிரிமினல்கள்(ஜெயலலிதா) தேர்தலில் போட்டியிடத் தடை! புதிய சட்டம்


புதுடில்லி : கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நபர்கள், தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில், புதிய சட்டம் நிறைவேற்றப்படும்'' என, சட்டத்துறை அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நபர்கள், தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்காக, மத்திய சட்ட அமைச்சகம் புதிய மசோதாவைத் தயாரித்துள்ளது. இதன் மூலம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
இதன்படி கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நபர்கள், தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கும் வகையில் இதில் புதிய உட்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று  சட்டத்துறை அமைச்சர் திரு சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கிரிமினல்கள்(ஜெயலலிதா) தேர்தலில் போட்டியிடத் தடை! புதிய சட்டம்"

Post a Comment