தலைப்புச் செய்தி

Thursday, September 8, 2011

டிபி ரியாலிட்டி நிறுவனம் தந்த பணம் லஞ்சம் அல்ல!கடன் !


அமலாக்கப் பிரிவினரின் தற்போதைய நடவடிக்கைகள் மூலம், கலைஞர் டிவிக்கு, டிபி ரியாலிட்டி நிறுவனம் தந்த பணம் லஞ்சம் அல்ல, கடன் தான் என்பது உறுதியாகிறது அமலாக்கப் பிரிவினரின் இந்த நடவடிக்கை மூலம் வழக்கு விசாரணை கனிமொழிக்கு சாதகமாகத் திரும்ப வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் கனிமொழிக்கு 2 வாரத்தில் கனிமொழிக்கு பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளது எனவே விரைவில் கனிமொழி பிணையில் விடுதலையாகலாம் என்றும் தெரிகிறது. 2ஜி வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை, சிபிஐ அடுத்த வாரம் தாக்கல் செய்ய உள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணையும் விரைவில் முடிவுக்கு வர உள்ளது.
இந்த விசாரணைகள் முடிந்து விட்டால் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம். இதனால் 100 நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் உள்ள கனிமொழி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்ததும், தன்னை பிணையில் விடுதலை செய்யக் கோரி மனு செய்வார் என்று தெரிகிறது.
சிபிஐ தரப்பிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புகள் இல்லைஎன்று தெரிவதால், அடுத்த இரு வாரங்களில் கனிமொழி விடுதலையாவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "டிபி ரியாலிட்டி நிறுவனம் தந்த பணம் லஞ்சம் அல்ல!கடன் !"

Post a Comment