பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நிகழ்ச்சியில் தமிழகமக்கள் முன்னேறக்கழக நிறுவனர் ஜான்பாண்டியன் கலந்து கொள்வதற்காக செல்லமுயன்றார். அவர் நெல்லை மாவட்டம் வல்லநாடு பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். .
இதையடுத்து பரமக்குடியில் கூடியிருந்த ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் கலவரத்தில் இறங்கினர். ஐந்து முக்கு சாலையில் சாலை மறியலில் குதித்த அவர்கள் போலீஸார் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். பாட்டில்களையும், கற்களையும் வீசி போலீஸாரைத் தாக்கினர். மேலும், அந்தப் பகுதி வழியே வந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.2 போலீஸ் வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்தினர்.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முயன்றனர். அப்படியும் கூட்டத்தினர் கலையவில்லை. இதையடுத்து கண்ணீப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. அப்படியும் கூட்டம் கலையாமல் தொடர்ந்து பெரும் தாக்குதலில் இறங்கியதால் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் கூட்டத்தினர் கலைய மறுத்து தொடர்ந்து தாக்குதலில் இறங்கியதால் போலீஸார் கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச் சூட்டில் முதலில் 3 பேர் உயிரிழந்தனர். பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் ஒருவர் பின் ஒருவராக தற்போது வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பரமக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரமக்குடி, சுற்று வட்டார கிராமங்களில் பாதுகாப்புக்காக 3ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் வாகனம் எரிப்பு, துப்பாக்கிச் சூடு, 144 தடை உத்தரவையடுத்து பரமக்குடியில் பதற்றம் நிலவுகிறது.

0 comments: on "பரமக்குடியில் கலவரம் – துப்பாக்கிச் சூட்டில் தற்போது வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்"
Post a Comment