தலைப்புச் செய்தி

Thursday, September 15, 2011

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்


அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.   உலகின் வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவிலும் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். அங்கு கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்த நிலை இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரு நபரின் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்துக்கு கீழ் இருப்பவர்கள் வறுமையில் வாடுபவர்களாக கருதப்படுகின்றனர்.
 
இந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளாக அங்கு பசி பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   கடந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் இது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 4 கோடியே 62 லட்சம் பேர் பட்டினியால் வாடுவதாக தெரியவந்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். அது அமெரிக்க மக்கள் தொகையில் 6-ல் ஒருபங்கு ஆகும்.
 
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாகாணங்களில் மிஸ்சிசிப்பி முதலிடம் வகிக்கிறது. அங்கு 22.07 சதவீதம் பேர் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து லூசியானா, கொலம்பியா, ஜார்ஜியா, நியூமெக்சிகோ, அரிஷோனா போன்றவையும் அடங்கும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்; கணக்கெடுப்பில் தகவல்"

Post a Comment