தலைப்புச் செய்தி

Saturday, September 17, 2011

ஆந்திர அரசு ஆஸ்பத்திரியில் 15 நாளில் 38 குழந்தைகள் பலி


ஆந்திர மாநிலம் கர்னூல் நகரத்தில் மாவட்ட அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு 2 வாரத்திற்கு முன்பு ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததால் ஒரே நாளில் 11 குழந்தைகள் பலியானார்கள். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் அதே ஆஸ்பத்திரியில் கடந்த 15 நாட்களில் 38 குழந்தைகள் பலியானார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பிணத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் குதித்தனர். இது பற்றி அவர்கள் கூறும்போது, கர்னூல் அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள், நர்சுகள் இல்லை மிகவும் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.
 
இதற்கு டாக்டர்கள் பற்றாக்குறைதான் காரணம். அரசு உடனடியாக கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஆந்திர அரசு ஆஸ்பத்திரியில் 15 நாளில் 38 குழந்தைகள் பலி"

Post a Comment