தலைப்புச் செய்தி

Tuesday, August 23, 2011

இந்திய ஜன நாயகத்துக்கு எதிரானவை கயவர்களின் நாடகம்! அருணா ராய்

தகவல் உரிமைச் சட்டத்தையும், வேலை உறுதி திட்டத்தையும் நாட்டிற்கு அளித்த அருணாராயின் தலைமையிலான பொது சமூக பிரதிநிதிகள் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அளித்தபிறகு அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பது ஆபத்தானதும், ஜனநாயகத்திற்கு விரோதமானதுமாகும் என அருணா ராயின் தலைமையிலான நேசனல் கேம்பயின் ஃபார் பீப்பிள்ஸ் ரைட் டு இன்ஃபர்மேஷன்(என்.சி.பி.ஆர்.ஐ) குற்றம் சாட்டியுள்ளது.

தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினரான அருணாராயின் தலைமையிலான பொதுசமூக பிரதிநிதிகளின் தொடர்ந்த தலையீடின் காரணமாகவே மத்திய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும், வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியது.

ஹஸாரே ஜனநாயக ஸ்தாபனங்களை அவமதிக்கிறார் என அருணாராய் குற்றம்சாட்டுகிறார். மேலும் அவர் கூறியதாவது: ‘என்.சி.பி.ஆர்.ஐக்கு லோக்பால் மசோதாவைக் குறித்து தெளிவான பார்வை உள்ளது. தங்களின் பரிந்துரையை பாராளுமன்ற நிலைக்குழுவின் முன்னால் தாக்கல் செய்வோம். ஹஸாரேயும் இந்த பாதையை பின் தொடரவேண்டும்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை வலுப்படுத்தியது பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்களாகும். அரசு தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச்சட்ட மசோதாவில் 153 திருத்தங்கள் பாராளுமன்ற நிலைக்குழுவில் நடந்த விவாதங்கள் மூலம் சாத்தியம் ஆனது. இந்த சட்டதிருத்தங்கள்தாம் சட்டத்தை மேலும் வலுவாக்கியது. மக்கள் லோக்பால் மசோதாவை 30-ஆம் தேதிக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டும் என்ற ஹஸாரே குழுவினரின் இறுதி எச்சரிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது. ஹஸாரே தவறாக உபதேசிக்கப்படுகிறார். தாங்கள் கூறுவது மட்டுமே சரி என்ற நிலைப்பாடு சரியல்ல. பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மீறும் முயற்சி ஜனநாயகத்திற்கு எதிரானது.

அரசு மற்றும் ஹஸாரேவின் லோக்பால் மசோதாவில் எங்களுக்கு கருத்துவேறுபாடு உள்ளது. பாராளுமன்றம் மற்றும் நீதிபீடத்திற்கும் மேலான அதிகாரம் பெற்ற அமைப்பாக லோக்பால் மசோதாவை மாற்ற ஹஸாரே முயல்கிறார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. பிரதமரை லோக்பால் வரையறைக்குள் உட்படுத்தக் கூடாது என்ற அரசின் நிலைப்பாடும் சரியல்ல. பிரதமரையும் லோக்பால் வரையறைக்குள் கொண்டுவர வேண்டும். ஆனால், பிரதமருக்கு எதிரான புகாரை லோக்பால் ஃபுல்பெஞ்சும், உச்சநீதிமன்ற ஃபுல்பெஞ்சும் பரிசோதித்த பிறகே விசாரணை நடத்தவேண்டும்.

நீதிபீடத்தின் ஊழலைக் குறித்து விசாரிக்க ஜூடிஸியல் அக்கண்டவுப்ளிட்டி கமிஷனை உருவாக்கவேண்டும்.’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த 40 ஆண்டுகளாக சமூக சேவை துறைகளில் பணியாற்றி வருகிறார் அருணாராய் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அன்னா ஹஸாரேவும், அவருடன் இருக்கும் நபர்கள் மட்டுமே பொதுசமூக பிரதிநிதிகள் என்ற வாதம் சரியல்ல என முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி எ.பி.ஷா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுக்கும் ஹஸாரேவின் நடவடிக்கை ஏகாதிபத்தியமும், ஜனநாயக விரோதமானதுமாகும். ஒவ்வொரு பிரிவினரும் தங்களின் சட்டத்தை நிறைவேற்ற போராட்டம் நடத்தினால் நாட்டின் நிலைமை என்னவாகும்? என அவர் கேள்வி எழுப்பினார்.

ஒன்று அல்லது இரண்டு லட்சம் மக்களின் ஆதரவு இருந்தால் போதும் இன்றைய தினமே பாராளுமன்றத்தின் செயல்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நாளை நீதிமன்றத்தையும் கட்டுப்படுத்தலாம் என ஹஸாரே ஆபத்தான அறிக்கையை வெளியிட்டதாக சேகர் சிங் குற்றம் சாட்டுகிறார்.

எல்லா மக்களையும் பிரதிநிதித்துவ படுத்துவதாக யாரும் உரிமை கொண்டாட முடியாது என தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினரான ஹர்ஷ் மந்தர் தெரிவித்துள்ளார்.

 தீவீரவாத ப ஜ க, ஆர் எஸ் எஸ் இன்னும் இதன் துணை அமைப்புகளுடன் கை கோர்த்துககொண்டு நாட்டை பிளவு படுத்தும் திட்டம்தான் இந்த உண்ணா விரத நாடகம்., மக்கள் விழிப்புடன் இதை உணர்ந்து ஒதிக்கி தள்ளவேண்டும். 

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இந்திய ஜன நாயகத்துக்கு எதிரானவை கயவர்களின் நாடகம்! அருணா ராய்"

Post a Comment