சென்னை: சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பேசுகையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்திருப்பதால் அதில் தலையிடும் அதிகாரம் தமிழக முதல்வராகிய எனக்கு இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது தூக்குத் தண்டனையை முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்யலாம். அவருக்கு அந்த அதிகாரம் உள்ளது. எனவே அதைப் பயன்படுத்தி அவர் மூவரையும் காப்பாற்ற வேண்டும் என்று பல்வேறு கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் கோரி வருகின்றனர். இதனிடையில் முதல்வருக்கு அந்த அதிகாரம் இல்லை என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
0 comments: on "தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை: ஜெயலலிதா!"
Post a Comment