இந்தியா, அமெரிக்கா, தென் கொரியா உள்பட உலகம் முழுவதிலும் 72 மிகப்பெரிய அமைப்புகளின் இணையதள தகவல்கள் ஹேக்கர்களால் ஊடுருவி சேகரிக்கப்பட்டுள்ளன என மெக்அபியின் துணை தலைவர் டிமிட்ரி அல்பெரோவிட்ச் தனது 14 பக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்ற செயலுக்கு பின்புலமாக சீனா நாட்டை சேர்ந்தவர்களே ஈடுபட்டுள்ளனர் என்றும் அது தெரிவித்திருந்தது. இந்நிலையில், இதற்கு பதிலடியாக சீனா தனது நாட்டிலும் ஹேக்கர்கள் ஊடுருவி கணினிகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர் என தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்கா 14.7 சதவீதம் மற்றும் இந்தியா 8 சதவீதம் என்ற வகையில் இணையதள முகவரி வழியே ஊடுருவி தங்களது கணினிகளில் தாக்குதலை நடத்தியுள்ளனர் என கூறியுள்ளது. எனினும் மெக்அபியின் அறிக்கைக்கு சீன கணினி பாதுகாப்பு கழகம் எந்த பதிலும் தரவில்லை.
0 comments: on "அமெரிக்க மற்றும் இந்திய ஹேக்கர்களால் கணினி செயல்பாடுகளில் பாதிப்பு: சீனா"
Post a Comment