சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் யார்-யார்? என்ற விவரங்கள் அடுத்த மாதம் தெரிய வரும் என்று மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்து அவர் கூறுகையில், சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் விவரங்களை பெறுவதற்காக அந்த நாட்டுடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டு நாடாளுமன்றமும் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டது. ஆனால், அந்த நாட்டு ஜனநாயக மரபுப்படி, அந்த நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் எல்லாம் அடுத்த (செப்டம்பர்) மாதம் முடிவடைந்து விடும். அதன் பின்னர், ஏப்ரல் மாதம் முதல் நாம் என்ன விவரங்களை கேட்கிறோமோ அந்த விவரங்களை சுவிஸ் வங்கிகள் அளிக்கும். அதேபோல் அந்த நாடு கேட்கும் விவரங்களையும் நாம் அளிக்க வேண்டியது இருக்கும் என்றார்.

0 comments: on "சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியவர்கள் விவரம் அடுத்த மாதம் தெரியும் - பிரணாப்!"
Post a Comment