அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதியை “ஐரீன்” புயல் தாக்கியது. இதனால் நியூயார்க், வடக்கு கரோலினா, மேரிலாண்ட் உள்ளிட்ட நகரங்களிலர் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை 3 நாட்கள் நீடித்தது. இதனால் தெருக்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வழக்கத்தை விட மிக அதிக அளவில் எழும்பிய அலைகளால் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது.
சுமார் 5 லட்சம் வீடுகளில் மின்சப்ளை துண்டிக்கப்பட்டது. அதில், நியூயார்க், நியூ ஜெர்சி, கானக்டிகட் ஆகிய இடங்கள் பெருமளவில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்சி ஏராளமான வீடுகள் இடிந்தன. மின்சாரம் இன்றி 30 லட்சம் மக்கள் தவிக்கின்றனர். மழை வெள்ளம் மற்றும் சூறாவளியில் சிக்கி 40 பேர் பலியாகி உள்ளனர். ரூ.35 ஆயிரம் கோடி சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன.
அமெரிக்காவை தாக்கிய “ஐரீன்” புயல் கனடாவுக்கு நகர்ந்தது. இதனால் காற்றும் மழையும் ஓய்ந்துள்ளது. ஆனால் இன்னும் சில இடங்களில் வெள்ளம் வடியவில்லை. வெள்ளம் குறைய இன்னும் 3 நாட்களாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடைய வெள்ளம் பாதித்த வடக்கு கரோலினா, விர்ஜீனியாவை உள்துறை மந்திரி ஜானெட் நபோலி டானோ, விவசாய துறை மந்திரி டாம்வில்சோக் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்த்தனர். புயல் மழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை கணக்கெடுத்தனர்.
0 comments: on "அமெரிக்காவில் புயல் தாக்கியதில் 40 பேர் பலி; வெள்ளப்பெருக்கால் மக்கள் அவதி"
Post a Comment