தலைப்புச் செய்தி

Wednesday, August 31, 2011

நைஜீரியாவில் முஸ்லிம்கள் தொழுகை முடிந்து வந்த 20 பேர் கொலை


லாஜோஸ்: நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையேயான மோதலில், துப்பாக்கி சூடு நடத்தியதில், 20 பேர் இறந்தனர்.

உலகம் முழுவதும் இன்று முஸ்லீம்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். இது நைஜீரியாவில் பெரும் கலவரத்தில் போய் முடிந்தது. நைஜீரியா நாட்டில் ஜோஸ் என்ற இடத்தில் உள்ள பள்ளிவாசலிலும் தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.

தொழுகை முடிந்து, பள்ளிவாசலை விட்டு மக்கள் வெளியேறிய போது, திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதை தொடர்ந்து பலரும் சுட்டு கொல்லப்பட்டனர். பள்ளிவாசலுக்கு நுழைவாயில் இந்த சம்பவம் நடந்ததால், யாரும் வெளியே வரமுடியவில்லை. எதிர்பாராத துப்பாக்கி சூடு சம்பவத்தில், நகர் முழுவதும் பதட்டம் நிறைந்து காணப்படுகிறது.

இதையடுத்து ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில், அமைதி திரும்பும் எனத் தெரிகிறது. இந்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், என்றார்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "நைஜீரியாவில் முஸ்லிம்கள் தொழுகை முடிந்து வந்த 20 பேர் கொலை"

Post a Comment