தலைப்புச் செய்தி

Monday, May 9, 2011

நொய்டா:விவசாயிகளின் கிளர்ச்சி பரவுகிறது


புதுடெல்லி:க்ரேட்டர் நொய்டாவில் பட்டா பர்ஸெளல் கிராமத்தில் நிலத்தை கையகப்படுத்தும் அரசின் முயற்சிக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் மரணித்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.சனிக்கிழமை போலீசாருடன் நடந்த மோதலில் காயமடைந்த விவசாயி மரணமடைந்தார்.துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த விவசாயி காலு நேற்று காலை மரணமடைந்தார்.

யமுனா எக்ஸ்பிரஸ் வே என்ற நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்துக்காக உத்தரப்பிரதேச அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு நஷ்ட ஈடு அதிகம் தரக் கோரி கடந்த ஜனவரி மாதம் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடந்த போராட்டம், ஞாயிற்றுக்கிழமையன்று ஆக்ரா மற்றும் அலிகருக்கும் பரவியது.நேற்று நடந்த போராட்டத்தில் பத்துக்குமேற்பட்டோர் காயமடைந்தனர்.மரண எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.சனிக்கிழமை விவசாயிகளின் போராட்டத்தைத்தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போலீசாரும், விவசாயி ஒருவரும் கொல்லப்பட்டனர்.மன்வீர் சிங், மனோகர் சிங் ஆகிய ஆயுதப்படை போலீசாரும், ரஜ்வீர் என்ற விவசாயி ஒருவரும் கொல்லப்பட்டவர்களாவர்.மரணித்த போலீஸ்காரர்களின் குடும்பத்திற்கு உ.பி மாநில அரசு 5 லட்சம் ரூபாய் நஷ்ட வழங்கப்படும் என அறிவித்துள்ளது.அதேவேளையில், விவசாயிகளின் கிளர்ச்சிக்கு தலைமை வகித்த மன்வீர்சிங் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு போலீஸ் ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மாவட்ட மாஜிஸ்ட்ரேட் தீபக் அகர்வால் மற்றும் போலீஸ் சூப்பிரண்ட் சூரியநாத் சிங் ஆகியோர் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளனர்.

சனிக்கிழமை மதியம் நடந்த துப்பாக்கிச்சூட்டைத்தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் மேலும் பல இடங்களுக்கு பரவியுள்ளது.கிரேட்டர் நொய்டா, நொய்டா, அலிகர், ஆக்ரா ஆகிய இடங்களிலும் கொந்தளிப்பான விவசாயிகள் போலீஸாரை எதிர்கொண்டனர்.ஆக்ராவில் சவுகான் கிராமத்தில் நடந்த மோதலில் இரண்டு போலீசார் காயமடைந்துள்ளனர்.போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள் ஆக்ராவிலும், அலிகரிலும் தேசிய நெடுஞ்சாலையை மறித்தனர்.ஏராளமான வாகனங்களையும், கூடாரங்களையும் விவசாயிகள் தீக்கிரையாக்கியதாக உ.பி மாநில சிறப்பு டி.ஜி.பி(சட்டம்-ஒழுங்கு) பிரிஜ்லால் தெரிவித்துள்ளார்.

சிறப்புக் காவல் படையினர் முறையில்லாமல் நடந்து கொள்ளுவதாகவும், வீடுகளை நாசப்படுத்துவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமத்தினர் தெரிவித்தனர்.

மாயாவதியின் சொந்த மாவட்டத்தில்தான் விவசாயிகளை சுட்டுக்கொன்றார்கள் என உ.பி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரீதா பகுகுணா ஜோஷி தெரிவித்துள்ளார்.அற்பமான விலைக்கு விவசாயிகளின் நிலத்தை அரசு கையகப்படுத்தியது.மக்களுக்கு மாயாவதியின் மீதான
நம்பிக்கை இழந்துவிட்டது என அவர் தெரிவித்தார்.

News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "நொய்டா:விவசாயிகளின் கிளர்ச்சி பரவுகிறது"

Post a Comment