தலைப்புச் செய்தி

Sunday, May 8, 2011

கொச்சியிலிருந்து புறப்பட்ட மும்பை கப்பலில் “திடீர்” தீ


கேரள மாநிலம் கொச்சியில் இருந்து மும்பைக்கு எம்.வி.ஓர்கிட் என்ற சரக்கு கப்பல் புறப்பட்டது. கண்ணூர் அருகே ஆழ்கடலில் இருந்து 40 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்தது.
 
அப்போது கப்பலில் தீடீர் என்று தீப்பிடித்தது. இது குறித்து கொச்சி துறைமுகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொச்சி மற்றும் மங்களபுரத்தில் இருந்து கப்பல் படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் கப்பலில் பெரிய சேதம் ஏதும் இல்லை.
 
கப்பல் ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினர். கப்பலில் திடீர் என்று தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கொச்சியிலிருந்து புறப்பட்ட மும்பை கப்பலில் “திடீர்” தீ"

Post a Comment