தலைப்புச் செய்தி

Tuesday, May 10, 2011

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு செய்வதில் ‌சிற‌ப்பு சலுகை!


+2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிக‌ள் மதிப்பெண் பட்டியலைப் பெறும்போதே மேல்நிலைக் கல்வித்தகுதியைப் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செய்திக் குறிப்‌பி‌ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தை ஒரேநாளில் நாடுவதால் கூட்ட நெரிசல் மற்றும் கால விரயம் ஏற்படுவது இம்முறைமூலம் முற்றிலும் தவிர்க்கப்படும்.தங்கள் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஎன வேலைவாய்ப்புகள் மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு +2 தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியர் தங்களுடைய கல்வித் தகுதியை ஆன்லைன் மூலம் தங்கள் பள்ளியின்மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.மதிப்பெண் சான்றிதழைப் பெற பள்ளிக்குச் செல்லும் போது, தங்கள் குடும்ப அட்டையை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். அதில் பதிவுதாரரின் பெயர் இருக்க வேண்டும்.

SSLC கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். புதிதாகப் பதிவு செய்வோருக்கு உரிய பதிவு எண் வழங்கப்படும்.மாற்றுத் திறனாளிகள்,கல்வித் தகுதியை பள்ளியில் பதிவு செய்தபின் முன்னுரிமையை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளளாம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு செய்வதில் ‌சிற‌ப்பு சலுகை!"

Post a Comment