தலைப்புச் செய்தி

Sunday, May 8, 2011

“நாசா”வில் தமிழக மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி ?


சென்னை: தமிழக மாணவ மாணவிகள் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று பயிற்சிப் பெற உள்ளனர். இதற்காக அமெரிக்கா செல்லும் அவர்களை இன்று சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க துணை தூதரக அதிகாரி வழியனுப்பி வைத்தார்.
விண்வெளி துறையில் ஆர்வம் உள்ள மாணவ- மாணவிகளுக்கு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் ஆண்டு தோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக்காக தமிழ்நாட்டின் நாமக்கல் வெற்றி விகாஸ், வேலூர் கிறிஸ்டி மெட்ரிக்குலேஷன் பள்ளி, சென்னை பத்மஷோ சாத்திரி, டி.ஏ.வி. பள்ளி போன்ற சில பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவ-மாணவிகள் இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். அவர்களை சென்னையில் இருந்து அமெரிக்க துணை தூதரக அதிகாரி ஆண்ட்ரூ டிசின் கினி இன்று வழியனுப்பி வைத்தார்.
உலக சுற்றுலா கழகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த மாணவ மாணவியர்கள் 12 நாள் பயணமாக அமெரிக்காவில் தங்கி இருப்பார்கள்.   6 நாட்கள் நாசா விண் வெளி மையத்தில் ராக்கெட் தயாரிப்பு, ராக்கெட்டுகளை ஏவுதல், விண்வெளி வீரர்களுக்கான உடைகள், பயிற்சிகள் பற்றி விளக்கமும் செய்முறை பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாணவர்களை வழியனுப்பி வைத்த பின்னர் அமெரிக்க துணை தூதர் ஆண்ட்ரூ கூறியதாவது:-
தமிழகத்தில் இருந்து அமெரிக்கா செல்பவர் களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 900 பேர் விண்ணப்பம் கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது 1 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் 6 லட்சம் பேர் படிக்கிறார்கள்.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அல்கொய்தா அமைப்பின் 2-வது கட்ட தலைவர்களிடம் இருந்து மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதிபர் ஒபாமா கூறியது போல இது முதல் கட்ட தாக்குதல்தான். தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் இணைந்து போராட வேண்டும். பின்லேடன் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.  என்று ஆண்ட்ரூ கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "“நாசா”வில் தமிழக மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி ?"

Post a Comment