தலைப்புச் செய்தி

Thursday, March 10, 2011

வளைகுடா தேஜஸ் இன்று உதயம்

ரியாத்,மார்ச்.10:'மலையாள வாசகர்களின் மனசாட்சி' எனக் கருதப்படும் தேஜஸ் நாளிதழின் சவூதி அரேபியாவின் முதல் பதிப்பு இன்று உதயமாகிறது. இதனை இண்டர்மீடியா பப்ளிஷிங் நிறுவனத்தின் தலைவர் நாஸருத்தீன் எழமரம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.


இன்று இரவு 8.30 மணிக்கு மலாஸ் கார்டன் பாலஸ் ஆடிட்டோரியத்தில் சவூதி செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரும், சவூதி தொலைக்காட்சி ஜெனரல் சூப்பர்வைசருமான ஷேக் அப்துற்றஹ்மான் அல் ஹஸ்ஸா கல்ஃப் தேஜஸ் பத்திரிகையின் சிறப்பு பதிப்பை வெளியிடுவார்.

வளைகுடா தேஜஸ் ஸ்பான்சரும், சவூதி-சிங்கப்பூர் பிசினஸ்

கவுன்சில் தலைவருமான அல் ராமிஸ் இண்டர்நேசனல் குழுமத்தின் தலைவர் ஷேக் அப்துல்லாஹ் ஸெய்த் அல் மலேஹி முதல் பிரதியை வாங்குவார். இந்நிகழ்ச்சிக்கு இ.அபூபக்கர் ஸாஹிப் தலைமை வகிப்பார்.

முதல் கட்டமாக வளைகுடா தேஜஸின் பதிப்பு சவூதி அரேபியாவில் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களிலிருந்து வெளிவரும். இரண்டு மாதத்திற்குள் பஹ்ரைன், குவைத், கத்தர் ஆகிய இடங்களிலிருந்தும் பதிப்புகள் வெளியாகும்.

சவூதியில் முக்கிய வெளீயீட்டாளரான சவூதி டிஸ்ட்ரிப்யூசன் நிறுவனம்தான் வளைகுடா தேஜஸ் பத்திரிகையை விநியோகிக்கும்.

சவூதி இந்தியன் பிசினஸ் கவுன்சில் துணைத் தலைவர் ஷேக் தவ்ஃபீக் அல் ஸலீம், சவூதி இஸ்லாமிய அமைச்சக பிரதிநிதி ஷேக் அப்துல்லாஹ் அல் மிஸ்ஃபர், கிங் சவூத் பல்கலைக்கழக நியூக்ளியர் சயன்ஸ் பேராசிரியர் டாக்டர்.தவ்ஃபீக் அஸா கவ்ஸர், சவூதி ரிசர்ச் அண்ட் மார்க்கெட்டிங் குழுமத்தின் உறுப்பினரும், சவூதி பிரிண்டிங் நிறுவனத்தின் முதன்மை எக்ஸ்க்யூட்டிவ் அதிகாரியுமான ஷேக் ஸஅத் அல் அஸ்வரி, டாக்டர் அஹ்மத் துத்தன்ஜி உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் சமூக, கலாச்சார துறையைச் சார்ந்த பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பர்.

இண்டர்மீடியா பப்ளிஷிங் நிறுவனத்தின் தலைவர் நாஸருத்தீன்

எழமரம் வரவேற்புரை நிகழ்த்துவார். மேலாண்மை இயக்குநர் எம்.உஸ்மான் நன்றியுரை நவிலுவார்.

பாலைவனத் தூது



Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "வளைகுடா தேஜஸ் இன்று உதயம்"

Post a Comment