தலைப்புச் செய்தி

Sunday, February 6, 2011

சிறையிலிருந்து YouTube இல் தோன்றிய அபூ ஹம்ஸா! அதிகாரிகள் அதிர்ச்சி (பட இணைப்பு)

பிரிட்டிஷ் சிறையில் ஏழாண்டு காலம் தண்டனை அனுபவித்து வரும் சமய போதகர் அபூ ஹம்ஸாவுக்கு கைதிகளுக்கு பொதுவாக வழங்கப்படும் தொலைபேசி வசதி பறிக்கப்பட்டுள்ளது.


அவர் தண்டனை அனுபவித்து வரும் தென் லண்டனிலுள்ள பெல்மாரஷ் சிறையிலேயே தொலைபேசி பாவனைக்காக கைதிகளுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட குறியீட்டு எண் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கடைசியாக இவர் தனது குடும்பத்தவர்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுப்பதாகக் கூறி பேசியுள்ளார். வழமையான தொலைபேசி அழைப்பு என நினைத்து அதிகாரிகளும் அலட்டிக் கொள்ளவில்லை.

இவர் இந்தத் தொலைபேசி அழைப்பில் சங்கேத மொழியில் தான் பேசியிருக்கின்றார்.

அது எகிப்தில் தற்போது மோசமடைந்து வரும் நிலைமைகள் பற்றிய இவரின் கருத்துக்களாக உள்ளது.

இந்தத் தொலைபேசி அழைப்பு மறுமுனையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு யுடியுப் வழியாக இணையங்கள்மூலம் ஒலிபரப் பாகியுள்ளது. விடயம் தெரிந்ததும் தான் அதிகாரிகள் பதறிப் போய் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

52 வயதான அபூ ஹம்ஸா ஒரு எகிப்திய பிரஜை. பிரிட்டனில் கொலைக்குற்றம் மற்றும் இன வெறுப்பைத் தூண்டியமை ஆகிய குற்றங்களின் பேரில் தண்டனை அனுபவித்து வருகின்றார்.

பயங்கரவாதக் குற்றங்களின் பேரில் இவரை நாடு கடத்துமாறு அமெரிக்கா கேட்டுள்ளது. அங்கு குற்றங்கள் நிரூபிக்கப்படுமானால் அவருக்கு 99 வருட தண்டனை விதிக்கப்படக்கூடும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சிறையிலிருந்து YouTube இல் தோன்றிய அபூ ஹம்ஸா! அதிகாரிகள் அதிர்ச்சி (பட இணைப்பு)"

Post a Comment