சுவீடனைச் சேர்ந்த இரு பெண்கள், அசாஞ்ச் மீது தொடுத்த பாலியல் வழக்கில், அவரை விசாரணைக்காக சுவீடனுக்கு கொண்டு செல்லும் வழக்கு, நேற்று லண்டனில் உள்ள பெல்மார்ஷ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அதில் ஆஜராவதற்காக, அசாஞ்ச் கோர்ட்டுக்கு வந்தார். நேற்றும், இன்றும் நடக்கும் இவ்விசாரணையின் முடிவில், அசாஞ்ச் சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவாரா என்பது தெரியவரும்.
இதுகுறித்து, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவரது வக்கீல் மார்க் ஸ்டீபன்ஸ்,"ஐரோப்பிய யூனியன் கைது வாரண்ட்டில் சில அடிப்படைச் சிக்கல்கள் உள்ளன.
மேலும், அசாஞ்ச் சுவீடனுக்குக் கொண்டு செல்லப்பட்டால், அவரது உயிருக்கு ஆபத்து நேரிடும்.
அதேநேரம், சுவீடன் அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கவும் வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த வாதங்களை கோர்ட்டில் முன்வைத்து வாதிடுவோம்' என்று தெரிவித்தார்.

0 comments: on "சுவீடனுக்கு கடத்தப்படுவாரா அசாஞ்ச்?"
Post a Comment