லண்டனில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது ஷூ வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து விலகிய பர்வேஸ் முஷாரப் தற்போது லண்டனில் வசித்து வருகின்றார். முஷாரப்பின் ’அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக்’ கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் லண்டனில் வால்தாம்ஸ்டோவ் என்ற இடத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவரை நோக்கி ஒருவர் ஷூவை வீசி எறிந்தார். அதிருஷ்டவசமாக அது முஷாரப் மீது படாமல் மேடையின் முன்பகுதியில் விழுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்து அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்த முயன்றனர். அது சமயம், அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு அமெரிக்கச் சிறையில் வாடி வரும் டாக்டர் ஆஃபியா சித்தீகி என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்மணிக்கு ஆதரவாக முழக்கமிட்டபடி சென்றார்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

0 comments: on "முஷாரப் மீது ஷூ வீச்சு"
Post a Comment