தலைப்புச் செய்தி

Tuesday, February 8, 2011

திருப்பூரில் மூடப்பட்ட ஆலையை திறக்கக் கோரி பிப்ரவரி 8 ம் தேதி எஸ்டிபிஐ யின் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் 5 இலட்சம் சாய, சலவை தொழிலாளர்களின் வேலைக்கு அபாயம். மூடப்பட்ட ஆலைகளை திறப்பதர்க்கு மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வரும் 8 ஆம் தேதி திருப்பூரில் SDPI ஆர்ப்பாட்டம். SDPI ன் மாநில தலைவர் KKSM தெஹ்லான் பாகவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அவர் தனது அறிக்கையில், திருப்பூரில் உயர்நீதி மன்ற உத்தரவை தொடர்ந்து 5 இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. உயர்நீதி மன்றம் நடைமுறை சாத்தியமில்லாத ஜீரோ டிஸ்சார்ஜ்-ஐ வலியுறுத்துகிறது.

எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு பிற மாநிலங்களில் உள்ளதை போன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதர்க்கும்,

ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை கடலுக்கு கொண்டு செல்லும் வகையில் குழாய்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுத்து மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறந்து 5 இலட்சம் தொழிலாளர்களின் எதிர் காலத்தை பாதுகாக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8 ஆம் தேதி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் SDPI சார்பாக நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "திருப்பூரில் மூடப்பட்ட ஆலையை திறக்கக் கோரி பிப்ரவரி 8 ம் தேதி எஸ்டிபிஐ யின் ஆர்ப்பாட்டம்"

Post a Comment