தலைப்புச் செய்தி

Monday, January 24, 2011

நீரா ராடியா டேப் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

"மத்திய அமைச்சர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள் உட்பட முக்கிய பிரபலங்களுடன் நீரா ராடியா உரையாடிய தொலைபேசி உரையாடல் வெளியான விவகாரத்தில்" மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


சுமார் 1,76,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக சர்ச்சையைக் கிளப்பி மத்திய அமைச்சர் ராஜா ராஜினாமா செய்ய காரணமாக இருந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், நீரா ராடியாவுடனான தொலைபேசி உரையாடல் வெளியானது பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலை வெளியே கசியவிட்டதை எதிர்த்து பொதுநல மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், இதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "நீரா ராடியா டேப் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!"

Post a Comment