தலைப்புச் செய்தி

Sunday, January 23, 2011

கத்தாரில் எரிபொருட்கள் விலை உயர்வு!

இன்றிலிருந்து பெட்ரோலியம் பொருட்களின் விலை உயர்வு அமலுக்கு வருவதாக கத்தர் எரிபொருள்(WOQOD) நிறுவனம் அறிவித்துள்ளது. "புதிய விலையேற்றம் சர்வதேச நாடுகளிலுள்ள விலையையும் அரபு பகுதியிலுள்ள பிற நாடுகளில் விற்கப்படும் விலையையும் ஒப்பு நோக்கினால் குறைவானதே" என கத்தர் எரிபொருள் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.


புதிய விலை நிர்ணயத்தின்படி,

80(.8 கத்தார் ரியால்) திர்ஹத்திற்கு விற்றுக்கொண்டிருந்த Super-97 Octane பெட்ரோல் விலை கத்தார் ரியால் 1 ஆகிறது.

70(.7 கத்தார் ரியால்) திர்ஹத்திற்கு விற்றுக்கொண்டிருந்த Premium-90 Octane பெட்ரோல் விலை கத்தார் 85 திர்ஹம்(.85 கத்தார் ரியால்) ஆகிறது.

70(.7கத்தார் ரியால்) திர்ஹத்திற்கு விற்றுக்கொண்டிருந்த டீசல் விலை கத்தார் ரியால் 1 ஆகிறது.

70(.7கத்தார் ரியால்) திர்ஹத்திற்கு விற்றுக்கொண்டிருந்த கெரோசின் விலை 80 திர்ஹம்(.8 கத்தார் ரியால்) ஆகிறது.

கத்தரைப் போன்று அரபு நாடுகள் பலவும் பெட்ரோலிய பொருட்களின் விலையினை ஏற்றியுள்ளன. ஐக்கிய அமீரகம் கடந்த மாதம் பெட்ரோலிய பொருட்களின் விலையினை இருமடங்காக உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கத்தாரில் எரிபொருட்கள் விலை உயர்வு!"

Post a Comment