தலைப்புச் செய்தி

Thursday, January 13, 2011

தந்தையற்ற குடும்பங்களின் எண்ணிக்கை பிரிட்டனில் பெருகுவது அம்பலம்

சிறிய கருத்து வேறுபாடுகளுக்காகவும், மனப் பூசல்களுக்காகவும் பிரியும் தம்பதியினரின் எண்ணிக்கை பிரித்தானியாவில் சமீப காலமாகவே மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது.


இதனால் ஐந்தில் ஒரு குழந்தை தற்போது தாய், தந்தையருடன் இணைந்து இல்லாமல் ஒரு பெற்றோருடனே வளர்ந்து வருவது ஆய்வில் நிருபனமாகியுள்ளது. குழந்தைகள் அதிகமாக தந்தையர்களிடம் வளர்வதால் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் பிரிந்திருக்கும் தன் பெற்றோரை பார்க்கக் கூட இந்த குழந்தைகளால் முடிவதில்லை எனவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

ஒரு பெற்றோருடன் வளரும் குழந்தைகளில் 75 விழுக்காட்டினர் பாடசாலை தேர்வுகளில் தோல்வியடைவதாகவும் , பெரும்பான்மையானோர் போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருவதையும் ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. தம்பதியர்களிடையே அதிகரித்து வரும் இந்த பிரிவுகள் மிகவும் வேதனைக்குரிய ஒன்று.

இது போன்ற சூழ்நிலைகளில் இரு பெற்றோர்களுடனும் குழந்தைகளுக்கு சுமூக உறவு நிலவுவதை உறுதி செய்வதற்கான திட்டங்களை செயல்படுத்த அரசு முனைந்து வருகிறதென குடும்ப விவகாரங்களுக்கான அமைச்சர் மரியா மில்லர் கூறியுள்ளார்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தந்தையற்ற குடும்பங்களின் எண்ணிக்கை பிரிட்டனில் பெருகுவது அம்பலம்"

Post a Comment