தலைப்புச் செய்தி

Thursday, January 13, 2011

அடிப்படைவாதிகளை ஆர்.எஸ்.எஸில் இருந்து விலகச் சொன்னோம்: பகவத்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அடிப்படைவாதக் கருத்துகளைக் கொண்டிருந்தவர்களை அமைப்பில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.


ஞாயிற்றுக் கிழமையன்று சூரத் நகரில் பேசிய மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ்.ஸில் அடிப்படைவாதத்திற்கு இடமே இல்லை என்று கூறிய பகவத், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தீவிரவாத அடையாளம் இட முயலும் காங்கிரஸைக் கடுமையாகச் சாடிய பகவத், சங் பரிவாரங்களுக்கு எதிராக தொடர்ந்து செய்யப்பட்டு வரும் சூழ்ச்சியே இது என்றும் கூறினார்.

ஹைதராபாத் மக்கா மசூதி குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ள சுவாமி அசீமானந்தின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய எவரும் தங்கள் அமைப்பின் தொடர்புடன் இருக்கவில்லை என்று மறுத்தார்.

மோகன் பகவத்தின் கூற்று பற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரியிடம் கேட்டபோது, எலிகள் கப்பலை அழிக்க முயலுகின்றன; ஆனால் கப்பல்தான் எலிகளை அழிக்கும் என்று கூறினார்.

பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என்று அரசு குற்றம்சாட்டும் பெரும்பான்மையோர் தாங்களாகவே ஆர்.எஸ்.எஸில் இருந்து விலகிவிட்டனர். மேலும் சிலரை விலகுமாறு கேட்டுக் கொண்டு விலக்கிவிட்டோம். ஆர்.எஸ்.எஸில் தீவிரவாதம் வேலைக்காகாது. எனவே போய்விடுங்கள் என்று மோகன் பகவத் கூறினார்.

இந்துத்துவா குறித்து கூறும்போது, "அடிப்படைவாதம் என்பது இந்துத்துவா அல்ல; இந்துத்துவா அனைத்தையும் உள்ளடக்கியது. அது எங்களின் அடையாளம்" என்று மோகன் பகவத் கூறினார்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அடிப்படைவாதிகளை ஆர்.எஸ்.எஸில் இருந்து விலகச் சொன்னோம்: பகவத்!"

Post a Comment