கெய்ரோ, ஜன. 26: எகிப்தில் கலவரம் நீடிப்பதால் அந்த நாட்டு அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் அவரது மகன் காமல் முபாரக், குடும்பத்துடன் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளனர்.
டூனிசியாவில் அண்மையில் நடைபெற்ற போராட்டங்களினால் அந்த நாட்டு அதிபர் பென் அலி பதவியை விட்டு விலகினார். அதன் எதிரொலியாக எகிப்திலும் போராட்டம் வெடித்துள்ளது.
கலவரம் தீவிரமடைந்திருப்பதைத் தொடர்ந்து அதிபர் ஹோஸ்னியின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் அவரது மகன் காமல் முபாரக், மனைவி, மகளுடன் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார். தலைநகர் கெய்ரோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

0 comments: on "எகிப்து அதிபரின் மகன் பிரிட்டனில் தஞ்சம்"
Post a Comment