தலைப்புச் செய்தி

Tuesday, January 18, 2011

சொந்த ஊரிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பலஸ்தீன் இளைஞன்

திங்கட்கிழமை (17.01. 2011) இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை முஹம்மத் துவைக் (வயது 30) எனும் பலஸ்தீன் இளைஞரை அவரது சொந்த ஊரான மேற்குக்கரை ஜெரிக்கோவிலிருந்து காஸாவுக்குப் பலவந்தமாக அனுப்பிவைத்துள்ளது.


காஸாவை அடைந்த துவைக் இது பற்றித் தெரிவிக்கையில், 1948 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் கூலித் தொழிலில் ஈடுபட்டிருந்த தன்னை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை திடீரென்று கைதுசெய்ததாகவும், 'அப்பிரதேசத்தில் தொழில் செய்வதற்கான அனுமதிப்பத்திரம் ஒன்றை வைத்திருக்கவில்லை' என்று குற்றம் சுமத்தித் தன்னை காஸாவுக்குப் பலவந்தமாய் அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், துவைக்கின் பெற்றோர் சுமார் 22 வருடங்களுக்கும் மேலாக ஜெரிக்கோவில் வாழ்ந்துவருகின்ற போதிலும் அவர்களின் அடையாள அட்டைகளில் சொந்த ஊர் காஸா என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சுமார் 22 வருட காலத்துக்கும் மேல் ஜெரிக்கோவில் வாழ்ந்துவரும் தன் பெற்றோர் மற்றும் மனைவி, பிள்ளைகளிடம் திரும்பச் சென்று சேர்ந்து வாழ்வதற்குத் தனக்கு அனுமதி தருமாறு கோரி துவைக் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையிடம் மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சொந்த ஊரிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பலஸ்தீன் இளைஞன்"

Post a Comment