வாஷிங்டன் : கடந்த 1998ல் இந்தியா மேற்கொண்ட அணுகுண்டு பரிசோதனையை அடுத்து, இந்தியாவின் ஐ.எஸ்.ஆர்.ஓ., மற்றும் டி.ஆர்.டி.ஓ., ஆகிய நிறுவனங்களுக்கு, ராணுவம் தொடர்பான பொருட்களைத் தர தடை விதித்தது அமெரிக்கா. தற்போது அமெரிக்கா விதித்திருந்த தடை விரைவில் விலக்கிக் கொள்ளப்படும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1998ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, ராஜஸ்தானின் பொக்ரான் என்ற இடத்தில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின், "இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம்' (ஐ.எஸ்.ஆர்.ஓ.,) மற்றும் "பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம்' (டி.ஆர்.டி.ஓ.,) ஆகியவற்றுடனான ராணுவ ரீதியிலான வர்த்தகத் தொடர்புக்கு, அமெரிக்கா தடை விதித்தது.
சமீபத்தில் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்நிறுவனங்கள் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். இந்நிலையில், தடையை நீக்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கான நடவடிக்கைகள் தற்போது முடிவடையும் நிலையில் இருப்பதாக, அமெரிக்க வர்த்தக அமைச்சகத்தின் தொழில் துறை மற்றும் பாதுகாப்புக்கான சார்புச் செயலர் எரிக் ஹிர்ச்சார்ன் தெரிவித்தார்.





0 comments: on "ஐ.எஸ்.ஆர்.ஓ.,க்கு தடை விலக்க அமெரிக்கா முடிவு"
Post a Comment