தலைப்புச் செய்தி

Monday, January 10, 2011

பழுத்தத் தக்காளியை தூக்கி வீசாதீங்க …

நம்முடைய சமையலறையிலேயே நம்முடைய அழகிற்கான புதையல் இருக்கிறது. சமையலறையில், உபயோகமில்லாமல் தூக்கி வீசப்படும் சில பொருட்களைக் கொண்டு நம் அழகை எப்படி மேம்படுத்தலாம் என்று பார்ப்போமா?


தக்காளி:

சமையலுக்கு உபயோகப்படுத்த முடியாத தக்காளியை குப்பையில் போட்டுவிடுவோம். அதை சமையலுக்கு பயன்படுத்தமாட்டோம். ஆனால், அடுத்த முறை இத்தகைய தக்காளியைக் கண்டால் அதைத் தூக்கிப் போட்டுவிடாதீர்கள். அதை கூழாக்கி, முகத்தில் பேஸ்ட்டாக போட்டுக் கொள்ளலாம். அதிலுள்ள சி மற்றும் ஏ வைட்டமின்கள் முகத்தின் கரும்புள்ளிகளை நீக்குவதில், சிறந்த முறையில் செயல்படுகிறது.

பால்:

பாலை உபயோகித்துவிட்டு, பாத்திரத்தை சுத்தம் செய்வதற்காக போடுவதற்கு முன், அதிலிருக்கும் சிலதுளி பாலை, சிறிது பஞ்சில் எடுத்து நம்முடைய முகத்தை சீராக துடைத்து எடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம், நம்முடைய முகத்தின் துவாரங்கள் திறக்கும். முகம் சுத்தமாகவும் பிரகாசமாகவும் மாற இது உதவுகிறது. சிறிது தேன் கலந்து பூசினால், சிறந்த மாய்ஸ்டரைசராகவும் செயல்படுகிறது.

ஓட்ஸ் கூழ்:

சாப்பிட்டுவிட்டு எஞ்சிய ஓட்ஸ் கூழை தூக்கி எறிய வேண்டாம். அதை முகத்திற்கான மாஸ்க்காகவும் ஸ்கரப்பராகவும் பயன்படுத்தலாம். ஓட்ஸ் கூழை சிறிது பால் அல்லது தயிருடன் சேர்த்து, நன்றாக அரைத்து முகத்தில் தடவலாம். பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் முகம் சுத்தமாகும்; முகம் உலர்ந்துவிடாமலும் பாதுகாக்கப்படும்.
ஆப்பிள்:

சாப்பிட்டுவிட்டு வீசப்படும் ஆப்பிளில் சிறிது சதைப் பகுதி இருக்கும். இதை வீணடிக்க வேண்டாமே. இதை அரைத்து, அதனுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவவேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகள் நீங்கும். அதோடு, ஆரோக்கியமான பளபளப்பையும் இது கொடுக்கும்.
வால்நட்:

நம் பிள்ளைகளுக்கு வால்நட் கொடுத்தால், அதை பாதி தின்றுவிட்டு போட்டுவிடுவார்கள். அதைத் துருவி பால் அல்லது பப்பாளி கூழுடன் சேர்த்து முகத்தில் தடவலாம். பாலுடன் சேர்க்கும்போது, அது முகத்தை பளபளப்பாக்குவதுடன் முகத்துவாரங்கள் திறப்பதற்கும் பயன்படுகிறது. பப்பாளியுடன் சேர்க்கும்போது, முகத்தை சுத்தமாக்குவதுடன் இறந்த செல்கள் உதிர்ந்து விடுவதற்கும், முகத்தின் தசை இறுகி, இளமையான பொலிவிற்கும் உதவும்.
ஆலிவ் எண்ணெய்:

தற்போது எல்லா வீடுகளிலும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மணம் போய்விட்ட எண்ணெயை நாம் பயன்படுத்துவதில்லை. நம்முடைய கால்களின் முடியை நீக்கியபின் இந்த எண்ணெய் கொண்டு நன்கு மசாஜ் செய்யலாம். இதன்மூலம் கால்களில் ஏற்பட்டுள்ள பிளவுகள் மற்றும் வெடிப்புகள் சரியாகும்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பழுத்தத் தக்காளியை தூக்கி வீசாதீங்க …"

Post a Comment