தலைப்புச் செய்தி

Wednesday, January 19, 2011

பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி

கடந்த செவ்வாய்க்கிழமை (18.01.2011) ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் உள்ள நாஸர் குவைஸ் எனும் பலஸ்தீனரின் வீட்டின்மீது திடீர் தாக்குதல் நடாத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸார், அவருடைய 16 வயது மகன் ஜிஹாதைப் பலவந்தமாகக் கடத்திச் சென்றுள்ளனர்.


குவைஸ் இதுபற்றித் தெரிவிக்கையில், தன் மகன் ஜிஹாதுடன் சேர்த்து தமது வீட்டுக்கு அண்மையில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்த ஃபாத்தி இஸ்பிதைன் என்ற 15 வயதுச் சிறுவனையும் ஆக்கிரமிப்புப் பொலிஸார் கடத்திச் சென்றனர் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, மேற்குக் கரையில் பலஸ்தீன் விவசாயிகளுக்குச் சொந்தமான பல டிராக்டர் வண்டிகளை ஜெனின் சோதனைச் சாவடியில் வைத்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கைப்பற்றிக் கொண்டுள்ளனர்.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தகவல் தெரிவிக்கையில், அடையாள அட்டைகளைப் பரிசோதிக்கும் போர்வையில் டிராக்டர் வண்டிகளில் இருந்து பலஸ்தீன் விவசாயிகளை இறக்கிப் பரிசோதித்த ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களிடமிருந்து வண்டிகளைப் பலவந்தமாக அபகரித்துக் கொண்டதோடு அவற்றை ஸாலிம் இராணுவ முகாமுக்கு ஓட்டிச் சென்றனர் என சாட்சியமளித்துள்ளனர்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பலஸ்தீன் சிறுவர்கள் கைது - இஸ்ரேலிய அடாவடி"

Post a Comment