கடந்த புதன்கிழமை (12.01.2011) ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தில் ஸில்வான் நகரைச் சேர்ந்த இரண்டு பலஸ்தீனச் சிறுவர்கள் மீது 'இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸாரை நோக்கிக் கல்லெறிந்தார்கள்' என்று குற்றஞ்சாட்டி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
மேற்படி வழக்கு விசாரணைகள் நிறைவுபெறும் வரை அவ்விரு சிறுவர்களையும் வீட்டுச் சிறையில் வைக்குமாறு ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தில் உள்ள இஸ்ரேலிய வழக்குமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மஹ்மூத் அல் பன்னா, உமர் ஸியாம் ஆகிய சிறுவர்கள் இருவரும் இதற்கு முன்னரும் சுமார் ஒரு வருடகாலமாக வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் என வதீ ஹலாவா தகவல் மையம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கையில் தெரிவித்திருந்தது. நிராயுதபாணிகளான பலஸ்தீனர்கள் மீது யூத ஆக்கிரமிப்பாளர் ஒருவர் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் செய்த போதே மேற்படி சிறுவர்கள் இருவரும் அவர் மீது கல்லெறிந்துள்ளனர். எனினும், பலஸ்தீன் சிறுவர்கள் தண்டனை பெற்றார்களே தவிர, அப்பாவிப் பலஸ்தீனர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடாத்திய யூத ஆக்கிரமிப்பாளர் உடனடியாக விடுவிக்கப்பட்டுவிட்டார் எனவும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.





0 comments: on "கல்லெறிந்த பலஸ்தீன் சிறுவர்கள் கைது"
Post a Comment