புதுடெல்லி: மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுகின்ற அவல நிலையை முற்றிலும் ஒழிக்க சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவாளர்களின் மறுவாழ்வு குறித்த இரண்டு நாள் கலந்துரையாடல் கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசுகையில் சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை அமைச்சர் வாஸ்னிக் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதது வருத்தத்துடன் வேதனையையும் அளிக்கிறது.
இந்த முறையானது மனித தன்மையற்றது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது மனித கௌரவம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும். இதனை ஒழிப்பதற்கு நாம் அதிகபட்ச திறனை செலவிட வேண்டும். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் மாற்று பணியில் சேர்வதற்கு அவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டம் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் தொடக்க காலத்தில் 7.7 லட்சம் துப்புரவாளர்களும் அவர்களை சார்ந்தவர்களும் கண்டறியப்பட்டு அவர்களில் 4.28 லட்சம் பயனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. எஞ்சிய துப்புரவு பணியாளர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் மறுவாழ்வு அளிக்க 2007-ம் ஆண்டு துப்புரவாளர்கள் மறுவாழ்வு மற்றும் சுயவேலை வாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டது," என்றார் அமைச்சர் முகுல் வாஸ்னிக்.

0 comments: on "மனிதக்கழிவை மனிதன் அகற்றும் முறையை ஒழிக்க கடும் நடவடிக்கை!"
Post a Comment