தலைப்புச் செய்தி

Thursday, January 13, 2011

காஸாவை சரமாரியாகத் தாக்கும் இஸ்ரேலியப் போர்விமானங்கள்

கடந்த செவ்வாய்க்கிழமை (11.1.2011) நள்ளிரவில் காஸா பிராந்திய வான்பரப்பில் சஞ்சரித்த இஸ்ரேலிய எஃப் 16 ரக போர் விமானங்கள் காஸாவின் பல இடங்களில் சரமாரியான ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இத்தாக்குதல்களினால் உயிரிழப்புக்கள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என காஸா மருத்துவசேவை ஒருங்கிணைப்பாளர் ஆதம் அபூ ஸல்மியா தெரிவித்துள்ளார்.


எனினும், இஸ்ரேலியப் போர்விமானங்களின் இத் திடீர் தாக்குதலினால் மத்திய காஸா பிரதேசத்தில் அமைந்திருந்த நஸரத் அகதி முகாமின் மேற்குப் பகுதி முற்றாகச் சேதமடைந்துள்ளதாகவும், இதே பிரதேசம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போதும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் குண்டெறிந்து எரியூட்டப்பட்டதாகவும் உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இனியும் இத்தகைய இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறலாம் எனவும், பொதுமக்கள் அதுதொடர்பில் அவதானமாக இருக்குமாறும் காஸாவின் பாதுகாப்பு வட்டாரங்கள் பலஸ்தீன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "காஸாவை சரமாரியாகத் தாக்கும் இஸ்ரேலியப் போர்விமானங்கள்"

Post a Comment