லண்டன் : பாலியல் வழக்கில் விசாரிப்பதற்காக, "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை சுவீடனுக்கு அனுப்ப வேண்டும் என்ற வழக்கின் முதற்கட்ட விசாரணை நேற்று கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இதில் அசாஞ்ச் நேற்று நேரில் ஆஜரானார். முழு வழக்கு விசாரணையும் பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் மீது சுவீடன் நாட்டு இரு பெண்கள், பாலியல் வழக்கு தொடுத்திருந்தனர். தற்போது லண்டனில் வசித்து வரும் அசாஞ்சை, இவ்வழக்கு விசாரணைக்காக சுவீடனுக்கு நாடு கடத்த வேண்டும் என்று சுவீடன் தரப்பு கோரி வருகிறது. இதுகுறித்த முதற்கட்ட விசாரணை நேற்று பெல்மார்ஷ் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்தது.
இதில் ஆஜராவதற்காக, அசாஞ்ச் தன் வக்கீல் மார்க் ஸ்டீபன்சுடன் வந்தார். இதுகுறித்து பேசிய கோர்ட் செய்தி தொடர்பாளர், "வழக்கின் உண்மையான பிரச்னைகளை கண்டறிவதற்காக இந்த முதற்கட்ட விசாரணை நடந்தது. வழக்கு குறித்த முழு விவரங்களும் தயார் செய்யப்பட்டு வருகின்றன' என்று தெரிவித்தார். இவ்வழக்கின் முழு விசாரணையும், பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.





0 comments: on "விக்கிலீக்ஸ்:கோர்ட் விசாரணையில் அசாஞ்ச் நேரில் ஆஜர்"
Post a Comment