தலைப்புச் செய்தி

Saturday, January 8, 2011

உத்தரபிரதேசத்தில் 3 3/4 அடி நீளம் கொண்ட மீசைக்காரர்

உத்தரபிரதேச மாநிலம் ஜதான் பகுதியைச் சேர்ந்தவர் பசந்த் சிங். 50 வயதான இவரின் மீசை 3 3/4 அடி நீளமுடையது.
அங்குள்ள கூட்டுறவு கமிட்டியில் பணியாற்றும் இவரை பசந்த் சிங் என்றால் யாருக்கும் தெரியாது.

`மீசைக்காரர்' என்றால்தான் எளிதில் தெரியும். அவர் கூறுகையில், 30 வருடத்துக்கு முன்பு விளையாட்டாக மீசை வளர்க்கத் தொடங்கினேன். பெரிதாக வளர்க்கலாமே என்று தொடங்கி இன்றைக்கு 3 3/4 அடி நீளத்துக்கு வளர்த்து உள்ளேன்.

ஆரம்பத்தில் மீசையை பராமரிப்பதில் சில பிரச்சினைகள் இருந்தது. இப்போது அதுவே எனக்கு பொழுது போக்காக ஆகி விட்டது. இன்றைக்கு என்னை மீசைக்காரன் என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "உத்தரபிரதேசத்தில் 3 3/4 அடி நீளம் கொண்ட மீசைக்காரர்"

Post a Comment