ஈராக்கில் உள்ள கர்பாலா நகரில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலம் உள்ளது. இங்கு தற்போது சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
எனவே, தினமும் திரளான யாத்திரிகர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒருவாரத்தில் மட்டும் நடந்த கார்குண்டு மற்றும் தற்கொலை தாக்குதல்களில் சுமார் 159 பேர் கொல்லப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இங்கு நடந்த கார் குண்டு தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் நேற்று 2 இடங்களில் தீவிரவாதிகள் மீண்டும் கார்குண்டு தாக்குதல் நடத்தினார்கள். யாத்திரிகர்கள் தங்கள் வழிபாட்டை முடித்துவிட்டு கர்பாலாவின் கிழக்கு பகுதியில் நிறுத்தியிருந்த பஸ்சில் புறப்பட தயராகி கொண்டிருந்தனர்.
அப்போது காலை 7 மணி அளவில் வெடிகுண்டு நிரப்பிய காரில் வந்த தற்கொலை படை தீவிரவாதிகள் அந்த பஸ்மீது மோதி வெடிக்க செய்தனர். இதில், 6 பேர் உயிரிழந்தனர். 34 பேர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் நடந்த 4 மணி நேரம் கழித்து அதன் அருகே இதே போன்று மற்றொரு சம்பவம் நடந்தது. இதில் 12 பேர் கொல்லப்பட்டனர். 21 பேர் காயம் அடைந்தனர். பலியானவர்களின் 2 பேர் ராணுவ வீரர்கள். இந்த இரண்டு சம்பவங்களில் மொத்தம் 18 பேர் பலியானார்கள்.
காயம் அடைந்த அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல்களை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

0 comments: on "ஈராக்கில் மீண்டும் கார்குண்டு தாக்குதலில் 18 பேர் பலி"
Post a Comment