லாகூர், ஜன. 25: பாகிஸ்தானில், லாகூர், கராச்சி நகரங்களில் செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் 15 பேர் கொல்லப்பட்டனர். ஷியா முஸ்லிம்களின் மத நிகழ்ச்சியை முன்னிட்டு லாகூரில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. அப்போது, மனிதகுண்டாக வெடித்துச் சிதறியதில் 4 போலீஸôர் உள்பட 13 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். 70 பேர் படுகாயமடைந்தனர். கராச்சியில் ஷியா முஸ்லிம்கள் சென்ற பஸ் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற தற்கொலைப் படை தீவிரவாதி மோதியதில் 2 போலீஸôர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.




0 comments: on "லாகூர், கராச்சியில் குண்டுவெடிப்பு: 15 பேர் சாவு"
Post a Comment